பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 185

‘இல்லறம் பூண்டு வாழ்ந்தபின், ஞான சாஸ்திரங்களைக் கேட்டு, மெய்யறிவு வாய்க்கப் பெற்றுப் பொருளையும் இன்பத்தை யும் நீங்கி. அருள், பொறை, ஆற்றல், t ஒழுக்கம், வாய்மை, தவம், தூய்மையென்னும் குணங்கள் பொருந்தி, ஒரறிவுயிர்க்கு வரும் துன்பத்தையும் பாதுகாத்துக் காலால் கடந்து, தோலுடுத்து, என்பு தோற்றும்படி உடல் இளைத்துத் துன்பங்களுக்கு கடுங்காமல் மலை, காடு என்பவற்றிற்குச் சென்று சருகை யும் நீரையும் காற்றையும் அருந்திப் பனிக் காலத்தில் தண்புனலில் மூழ்கியும், வேனிற் காலத்தில் பஞ்சாக்கினியிலிருந்தும் தவம் புரிந்து ஒழுகுவது துறவறம்’

இவ்வாறு டாக்டர். உ. வே. சா. அவர்கள் பொருள் விளக்கம் காண்கின்றார் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு; ஆராய்ச்சி)

கல்வி

இனிக் கல்வி குறித்துக் குமரகுருபரர் கூறுவன வற்றைக் காண்போம்.

கல்வி கற்புடைய மனைவியை ஒப்பது; அம்மனைவியினாற் பெறும் காதற் புதல்வனே இனிய செய்யுள் ; சொல்வன்மை செல்வமாகும்; அந்தச்

செல்வத்தால் அவையிலுள்ளார் மனம் மகிழச் செய்ய ஒருசிலராலேயே ஒல்லும் என்பது குமரகுருபரருடைய கருத்தாகும். .