பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 வாழ்வியல் நெறிகள்

கல்வியே கற்புடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே ஈர்ங் கவியாச் சொல்வளம் மல்லல் வெறுங்கையாம் மாணவை மண்ணுறுத்தும்

செல்வமும் உண்டு சிலர்க்கு.

-நீதிநெறி விளக்கம்: 3

மேலும் நீதிநெறி விளக்கத்தில் இளமை நிலையாமை, செல்வம் கிலையாமை, யாக்கை கிலையாமை என்னும் தொன்றுதொட்ட அரிய கருத்து களைப் பின்வருமாறு உரைப்பர்.

நீரிற் குமிழி இளமை கிறைசெல்வம் நீரிற் சுருட்டு நெடுக்திரைகள்-நீரில் எழுத்தாகும் யாக்கை கமரங்காள் என்றே வழுத்தாத எம்பிரான் மன்று.

-நீதிநெறி விளக்கம்-காப்புச் செய்யுள்.

இதனால் நீரில் தோன்றும் குமிழி போன்றது இளமை என்றும், அக்ரீரில் எழும் அலைகளைப் போன்றன. இளமை என்றும், அக்ரீர் மேல் எழுதிய எழுத்துப் போன்றது உடம்பு என்றும், அதனால் சிவபெருமானை வழுத்துவதே வாழ்வாக அமைய வேண்டும் என்றும் குமரகுருபரர் குறிப்பிடுகின்றார்.

மேலும் படைப்புக் கடவுளாம் பிரம்மாவைக் காட்டிலும், படைப்பிலக்கியம் படைக்கும் புலவன் உயர்ந்தவன் என்று கூறுகிறார் குமரகுருபரர். காரணம் பிரம்மன் படைக்கும் மனிதர்கள் காலப் போக்கில் மடிந்து முடிகிறார்கள். ஆனால் புலவோர் படைக்கும் அரிய இலக்கியப் படைப்புகள் காலங் கடந்தும் வாழும் அமரத்துவ நிலையினைப் பெற்றவை என்று குறிப்பிடுகின்றார்.