பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 187

கலைமகள் வாழக்கை முகத்தது எனினும் மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயாபுகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு

- -நீதிநெறி விளக்கம்; 6

அறநெறிகள்

குமரகுருபரர் ஒரு பெருந்தமிழர்; சைவ நெறி புரந்த தவச் செல்வர்; தமிழின் மாட்டுத் தனிப் பேரன் ! செலுத்தியவர்; தமிழ்மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து உய்தியினை இறுதியிற் பெற்றுச் சாகாநிலை கூட வேண்டும் என்று கருதிய உத்தமராவர். எனவே தம்முடைய நூல்களில் தமிழினம் ஈடேற்றம் கான ஒப்பற்ற பல கருத்துகளை-அறநெறிக் கருத்துகளை வலியுறுத்தியுள்ளமையைக் காணலாம். |

செல்வம் என்பது கம்முடைய மனத்தில் எழுகின்ற கிறைவாகும். மீண்டும் மீண்டும் கட்டுக்கடங்காமல் ஆசை படர்ந்துகொண்டிருந்தால் அதுவே வறுமைக்கு வாய்ப்பாகும் என்றார்.

செல்வம் என்பது சிங்தையின் கிறைவே அஃகா நல்குரவு அவாவெனப் படுமே.

-சிதம்பர மும்மணிகோவை; 26 : 20-21

அடுத்து, ஒருவன் தனக்குப் பிறர் பெருமதிப்புத் தர வேண்டும் என்று விரும்பினால் முதற்கண் தான்

அவர்களுக்கு மதிப்புத் தர வேண்டும் என்கிறார்.