பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 193;

கலிவெண் பாவெனும் ஒலிபெறும் அலங்கல் அக்

குகன்திரு முடிதனுக்கு உகந்திடச் சூட்டிப் பிள்ளைக் கவிமுதல் வெள்ளைக் கிழத்தி, மாலையி றாகச் சால்பமை பிரபந்தம் முந்நான் கியற்றி’

எனவும், நீதி நூல் விளக்கம் எனும் ஏதமில் பனுவலை யும் இயற்றினார் எனவும் ஆக மொத்தம் பதினான்கு. நூல்களைச் செய்ததாகக் கூறுவர்.”

டாக்டர். உ. வே. சாமிநாதையர், காசி மடத்துப் பழமையான எட்டுப் பிரதிகளையெல்லாம் ஆய்ந்து (1) கந்தர் கலிவெண்பா (2) மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் (3) மதுரைக் கலம்பகம் (4) நீதிநெறி விளக்கம் (5) திருவாரூர் நான்மணி மாலை (8) முத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் (7. சிதம்பர மும்மணிக் கோவை (8) சிதம்பரச் செய்யுட் கோவை (9) பண்டார மும்மணிக்கோவை (10) காசிக் கலம்பகம் (11)சகலகலா வல்லி மாலை (12) கைலைக் கலம்பகம் (13) காசித், துண்டி விநாயகர் பதிகம் ஆகிய பதின்மூன்று, நூல்களே குமரகுருபரர் அருளியவை என்று உறுதி செய்கிறார்.4

மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மீனாட்சியம்மை குறம், சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை எனும் வேறு மூன்று பிரபந்தங்களும் குமரகுருபரர் இயற்றியனவாக சில அச்சுப் பிரதிகளிற் காணப்பட்டாலும், அவை காசி மடத்துப் பழைய எட்டுப் பிரதிகளில் காணப்படாமை, பரம்பரையாகப் பாடம் சொல்லுபவர்கள் இம்மூன்றையும் குமரகுருபரர் நூல்களாகச் சேர்த்துச் சொல்லாமை, மேலும் சொற் பொருளதிமைகளாலும் பிற பிரபந்தங்களோடு மாறு: