பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 197

மீனாட்சியம்மையும் சோமசுந்தரரையும் பாட்டுடைத் தெய்வங்களாய் வைத்துப் பரவி இருக்கின்றார்.

முருகப் பெருமான்

இவர் இளமையிலே தம்மை ஆட்கொண்ட முருகக் கடவுளிடத்தே தனியன்பு பூண்டவர். அவரையே வழிபடு கடவுளாகக் கொண்டவர். முருகக் கடவுளைப் பாட்டுடைத் தலைவராய்க் கொண்டு கந்தர் கலிவெண்பா, முத்துக்குமார சுவாமிப் பிள்ளைத் தமிழ் எனும் இரு பிரபந்தங்களை இயற்றியிருப்பதோடு, பிறவிடங்களிலும் அவருடைய புகழ்வகைகளை விரித் துரைப்பார்.

மு. ரு க ரு ைட ய திருவவதாரத்தைக் கங்தர் கலிவெண்பாவில் கூறுகிறார். சரவணப் பூந் தொட்டி யில் விளையாடியது, இந்திரனை எதிர்த்தது, கா ன் மு. க ைன க் குட்டிச் சிறையிருத்தியது, சிவபெருமானுக்குப் பிரனவோபதேசம் புரிந்தது, வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது வீரர்களைத் துணை கொண்டது, கிரவுஞ்ச மலையின் மேல் வேலெறிந்தது, சூரசங்காரம் செய்தது,தேவயானையை மணம் புரிந்தது, வள்ளி நாயகியை ஆட்கொண்டு மணந்தது முதலான செய்திகளைச் சுவைபடக் கூறு கிறார்.

முருகப் பெருமானும், பரமசிவமும் ஒருவரே எனும் கொள்கையுடையவர் இவர். கந்தர் கலிவெண்பாவில் பரமசிவத்திற்குரிய இ ய ல் பு க ைஎ7, முருகருக்கு

அமைத்துப் பாடியுள்ளார்.

வா.-13