இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
200 வாழ் விடல் நெறிக ள்
- சிறுகட் பெருங் கொலைய மழவிளங் களிறு.’
“தொந்தித் தந்தி’
கரட மதகளி’
“கம்ப மதத்தர்’
படாமணி மத்தகத் தந்தி’
அஞ்சு கஞ்சக்கரக் கற்பகம்’
‘மால் யானைக் கன்று’
- ஒரு கோட்டு மழக் களிறு’ என்றெல்லாம் வி. க | ய க ைர ப் பாராட்டுவார். “மலையிலே உண்டான கன்னிப்பிடி பளித்த ஒரானை என் மனத்துள் வந்து பாசமாகிய தளையை அறுத்துப் பாவமாகிய கடலைக் கலக்கி கேசமாகிய தளையிலே பட்டு நிற்கும்’ என்று புகழ்கிறார்.
மீனாட்சி அம்மை
இவ்வம்மை, திருமாலுக்குத் தங்கை என்பதும், இறைவன் கடனம் புரியும்போது, தாளங்கொட்டி ஆடுவதும், சதாசிவ மூர்த்தியின் துடையில் வீற்றிருத் தலும் கூறி, மேலும் அம்மையின் கண்களிலிருந்து கலைமகளும் திருமகளும் உதித்தது, அம்மையின் கலா பேதங்களில் சந்திரன் ஒன்றாக இருப்பது, அம்மை கரும்புவில்லையும் பஞ்ச பாணத்தையும் கொண்டிருப்பது தன் கரத்தில் கிளியை ஏந்தியிருப்பது முதலான பல செய்திகளைக் கூறியிருக்கிறார்.
மீனாட்சியம்மையின் தி ரு ப் .ெ ப ய ர் க ள ா க அங்கயற்கணம்மை, அணங்கரசு, அபிடேக வல்லி,