பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி, பாலசுப்பிரமணியன் 205

நிலத்தை வருணித்து, அதற்கு முருகன் தலைவ னாதலை உணர்த்துகிறார். “தண்ணென் குறிஞ்சித் தவங்தலை யளிப்பவன்’ என்பதில் குறிஞ்சியைக் கூறினார். குமரகுருபரர் பிரபந்தம் பாட எடுத்துக் கொண்ட தலங்களுட் பெரும்பாலான மருதநிலத்தில் அமைந்தவை. அக்கில வருணனை மிகுதியாகக் காணப்படுகிறது.

‘மருதக் கோமகன் குடிகொண்ட சோனாடு’

என்று முருகனை விளிப்பர். தில்லை, தருமபுரம்,

காசித்திருத்தலங்கள் மருதத் தலங்களே.

மருதம்லிற் றிருக்து பெருவளஞ் சுரக்கும் தருமையம் பதி

இறும் பூது பயக்கும் நறும்பனை மருதக் கன்னிமதி லுடுத்த காசிமா நகரம்

என அத்தலங்களைப் பாடுவர்.

தாழையாகிய நெய்தல் கிலக் கருப்பொருளும், வயலிலுள்ள சங்கும் முத்துமாகிய மருதநிலக் கருப் பொருளும மயங்கும் தினை மயக்கத்தை.

- நெய்தலோடு தழி இய மருதவேலித் தெய்வப் புலியூர்’

என்று பாடுவர்.

தலைவனும் தலைவியும் ஒத்த அறிவு முதலியன உடையராதல் வேண்டும் எனும் அகப்பொருள் இலக்கணத்தை இவர் பண்டாரமும் மணிக்கோவை யில் எடுத்தாளுகிறார். ஞானாசிரியரைத் தலைவராக வும் அடியாரைத் தலைவியாகவும் உருவகம் செய்து அ வ்விருவருக்கும் ஒப்புமை கூறுகிறார்."