பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாடா கி. பாலசுப்பிரமணியன் 23

திணை இலக்கியம்

தமிழில் தோன்றி வளர்ந்துள்ள இலக்கிய வகை களுள் மிகவும் புகழும் பரவலும் உடையது திணை இலக்கியம். திணை இலக்கியம் கில அடிப்படை யிலானது. கிலமும் பருவப் பொழுதுகளும் இயற்கைப் பின்னணியும் மனித வாழ்வும் இயைபுபடப் புனையப் படுவது திணை இலக்கியமாகும். கிலச்சாயலும் அதில் வாழும் உயிரினச் சாயலும் மனித வாழ்வுச் சாயலும் ஒவியமாகப் படிந்து கிடப்பதே திணை இலக்கியம்.

இத்திணை இலக்கியம் குறித்து, இன்று கிடைக்கப் பெறும் தமிழ் நூ ல் க ளு ள் முதன்மையான தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறது. எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களில் முறையே எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கியத்துக்கும் இலக்கணம், திறனாய்வு செய்த பெருமை தொல்காப்பியருக்குண்டு. தமிழில் எவ்வித ஆராய்ச்சியானாலும் அது தொல்காப்பியத்திலிருந்தே தொடங்குவதாக அமையும். ஏனெனில் அறிவியல் முறையில் தமிழ் ஆய்வு தொடர்பான அனைத்துக் கருத்துகளையும் குறிப்பிட்டு விளக்கியுள்ள சிறப் புடையது தொல்காப்பியம். அம்முறையில் தொல் காப்பியத்தில் கிலமும் பொழுதும் விளக்கப்பட்டிருப் பதை முதலில் காணலாம்.

தினை இலக்கியத்தை அகம், புறம் என இருவகையாகப் பிரித்து விளக்குகின்றது தொல் காப்பியம். அகத்திணை கைக்கிளை, முல்லை,

குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என