பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் 213

இலக்கியத் திறனாய்வாளர்கள் கற்பனையைப் பல வகைகளாய்ப் பாகுபடுத்துவர். படைப்புக் கற்பனை, இயைபு கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை, ஆக்கக் கற்பனை, கினைவுக் கற்பனை எனப் பல வகையாகப் பாகுபடுத்தினாலும், உண்மைக் கற்பனை, வெறுங் கற்பனை எனும் இவ்விரு பாகுபாடு களை எல்லோரும் ஒப்புவர்.

குமரகுருபரர் வெறுங்கற்பனை அமைந்த பாடல் களையே பெரிதும் யாத்துள்ளார். ஒரு ககரத்தின் செல்வ வாழ்வைக் கற்பனை செய்கிறார் குமரகுருபரர். மேகங்கள் நிறைந்து வானத்தே படலம் இட்டாற் போல் உள்ளன. ககரத்தின் மாடிகளில் கட்டிய கொடிகள் அந்த முகில் படலத்தைக் கிழிப்பவை போல் உயர்ந்துள்ளன. அந்தக் கொடிகள் மிகப் பலவாய் நெருங்கியிருத்தலால், வானளாவி உயர்ந்த சோலை போல் தோன்றுகின்றன. மாடத்தின் தோரனம் அமைந்த முகப்பு மிக உயரமாக உள்ளபடியால், வானத்தே திரியும் சந்திரன் அவ்வழியாகச் செல்லும் போது தவழ்ந்து ஏறும்படியாக உள்ளது. சந்திரன் அவ்வாறு தவழ்ந்து செல்லும் காட்சியைக் காண் கின்றனர் மாடியில் உள்ள மகளிர். அவர்கள் அப்போது மது உண்டு மயங்கிய நிலையில் இருப்பதால் சந்திரனைத் தேன்கூடு என்று எண்ணி விடுகின்றனர். உடனே தம் காதலரை அழைத்து, ‘இந்தக் கூட்டின் தேன் வேண்டும். இதைக் கொணர்ந்து தாருங்கள்’ என்று வேண்டுகிறார்கள். காதலராகிய ஆடவர் உடனே வந்து சந்திரனைப் பற்றிப் பிழிந்து ஊற்றத் தொடங்குகிறார்கள். அப்போது சந்திரன் கொந்து, ‘அய்யோ, இது தண்டனையாக முடிந்ததே? கான் உங்கள் காதலியரின்

வா.-14 =