i * i. டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 215
குட்டுப்பட்டதை மறந்து விட்டாயோ?’ என்று கோபத்தோடு கூறி முருகர் இதழ் அதுக்கினர் என்று கற்பனை செய்திருக்கிறார், குமரகுருபரர்.”
சிவபெருமானின் திருவடி கான, ஏனமாய் உருவெடுத்துப் பூமியைக் குடைந்து சென்றும், காணாமல் அயர்ந்தவர் திருமால். ஆனால்
சிவபெருமானோ தில்லையில் திருவடி தூக்கி ஆடிக் கொண்டிருக்கிறார். திருவடி காணாது மயங்கிய திருமால், அவர் கால்துக்கி ஆடுவதைக் கண்டு விட்டால், சிவபெருமானின் திருவடியைத் தாம் கண்டு விட்டதாக பெருமை கொள்வார் அல்லவா? அவ்வாறு இருக்க, அவர் ஆடலாமா? என்று வினவுவாருக்கு, *நடராசப் பெருமான் துாக்கியது இடத் திருவடியே. அவ்வடி திருமாலின் தங்கையாகிய உமைக்கு உரியது; ஆதலின் திருமால் கண்டாலும் குறைவின்று என்று து.ாக்கினர் போலும்’ என்று கற்பனை செய்கிறார் குமரகுருபரர். இன்னும் அவர் தென்திசை நோக்கித் திருவடி தூக்கியிருப்பது, தென்திசைக்குரிய எமனை ‘வாரற்க வந்தால் மீண்டும் உதைபடுவாய்’ என்று அறிவுறுத்தலே என்றும் கற்பனை செய்திருக்கிறார் குமரகுருபரர். இதுபோன்ற கற்பனை உத்திகள், கனக்கில் அடங்காதவை; இவர் யாத்த பிரபந்தங் களில் உள. m
உவமை உருவகம்
‘உண்மையைக் கூறுமிடத்து ஒரு புலவனுடைய சிறப்பை அறிவதற்கு அவன் கையாளும் உவமை ஒன்றே போதுமானது எனலாம். அன்றாடம் நூற்றுக் கணக்கான பொருள்களை நாம் காண் கிறோம்.