பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F. : : T s f 216 வாழ்வியல் நெறிகள்

ஆனால் - இப்பொருள்களினிடையே காணப்பெறும்

ஒப்புமை கம் அறிவில் படுவதில்லை; பட்டாலும்

பல சமயங்களில் புறத்தே காணப்படும் ஒப்புமை

மனத்திற் படுகிறதே தவிர, ஆழ்ந்துள்ள ஒப்புமை கம் கவனத்தை ஈர்ப்பதில்லை. தொடர்பற்ற பொருள் களிடையே கூடச் சிறந்த கவிஞன் ஒப்புமையைக் காண்கிறான்; கம்மையும் காணுமாறு செய்கிறான் நாம் கண்டும் காணாத பொருள்களை விளக்க உதவுவதுடன், அடிக்கடி காணும் பொருள்களின் தனிச் சிறப்பை விளங்கிக் கொள்ளவும் உவமையைப் புலவன் கையாள்கிறான். ஆகவே தான் அவனுடைய புலமைச் சிறப்பு இதன் மூலம் வெளிப்படுகிறது என்று சொல்கிறோம்.'60

உவமை உருவக அணிகள் குமரகுருபரர் செய்யுட் களில் கன்கு அமைந்து, இவரது புலமைத் திறத்தை விளக்குகின்றன. இயற்கைப் பொருள்களுக்கேற்ற உவமைகளைக் கூறுகின்றார். வெண்கடப்ப மலருக்குத் துகிலும்,” கோங்க மலருக்குப் பொற் கிழியும்,’ பாம்புக்குக் காந்தளும், தாமரையிலைக்கு மரகதத் தகடும்,’ அதன் மலருக்கு மாணிக்கமும்,85 கொன்றைக்குப் பொன்னும் உவமையாக எடுத்துரைத் துள்ளார். பிறரை வஞ்சித்து எளியாரது உடைமை கொள்வாருடைய செல்வம், மகளிர் நகில் போலப் பெருத்தாலும், அவர்கள் இடைபோல் தேய்ந்துவிடும்,’ என்று உவமித்துள்ளார்.” தலையாயார், இடையா யார், கடையாயார் ஆகிய முத்திறத்தினருடைய செல்வங்களுக்குப் பொதுமகள், குலமகள், கைம்பெண் என்பார் கலத்தை உவமித்துள்ளார். சிவபெருமானது திருமுடிக்கு ஏனற்புனத்தை ஒரு செய்யுளில் உவமித்