பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 217

துள்ளார். கமலேசரது வேணியிலுள்ள தலை, புனத்தில் பறவைகளைப் பயமுறுத்த வைத்த தலை; கங்கை அப்புனத்தில் தினைக் காவல் புரியும் குறமகள், பிறை அவள் கைக்கொண்ட கவண்’ என்பார்.98 நீதிநெறி விளக்கத்தில் பல நீதிகளை உவமையினால் விளக்குகிறார்.

ஒன்றை, மற்றொன்றோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை; அவ்வாறில்லாமல் ஒன்றை மற்றொன் றாகவே கூறுவது உருவமாகும். “தாமரை முகம்”, என்பது தாமரை போன்ற முகம் என்று விரிவுபட்டு, தாமரையை முகத்தோடு வேறுபடுத்திக் காட்டும். ‘முகத்தாமரை’ என்பது ஒரு சொல்லாக வழங்கி, முகத்தையும் தாமரையையும் ஒன்றெனவே காட்டும். இத்தகு உருவக உத்தி அமைத்துப் பாடுவதில் வல்லவர். குமரகுருபரர்.

இவர் இளமையை நீர்க் குமிழியாகவும், செல்வத்தை அலைகளாகவும் யாக்கையை நீரில் எழுத்தாகவும் உருவகிக்கிறார்.79 கல்வி, கவித்துவம், சொல்வளம் என்பவற்றை முறையே ஒருவனுக்கு மனைவியாகவும், ‘புதல்வனாகவும், செல்வமாகவும் உருவகம் செய்கிறார்.” வண்மையுடையாரைக் கற்பகத் தருவாக உருவகம் செய்து, அவருடைய கண்ணோக்கை அரும்பாகவும், ககைமுகத்தை மலராகவும், இன்மொழியைக் காயாகவும், வண்மை யைப் பழமாகவும், அமைத்து அதனை முற்று வேகம் ஆக்குகின்றார்.19 ‘யமனென்னும் பெயருடைய கொடுங் தொழிலுடைய வலைஞன், யாக்கையாகிய உவர்ருர்க் கேணியில் அறிவாகிய தலையையுடைய உயிராகிய மீனைத் துன்புறுத்திப் பிடிக்கும் இயல்