பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வாழ்வியல் நெறிகள்

ஏழாகப் பாகுபடும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்று புறத்தினையும் ஏழாகப் பகுக்கப்படும்.

அகத்தினை களவு, கற்பு என்று இருகை கோளாகப் பிரியும், களவு காமப்புணர்ச்சி, இடக் தலைப்பாடு, பாங்கொடு தழுவுதல், தோழியிற் கூட்டம் என்று நான்கு வகைப்படும். கற்பு மறைவெளிப்படுதல், தமரின் பெறுதல் என்று இருவகைப்படும். பிற்காலத் தில் இவை விரிவுபடுத்தி விளக்கப்பட்டன.

முப்பொருள்கள்

அகப்பொருள் பாடல்களில் முதல் பொருள், கருப் பொருள், உரிப் பொருள் என்று முப்பொருள் பயின்று வரும். இவை மூன்றில் உரிப் பொருள் என்பதே பாடலின் அடிக்கருத்து ஆகும். இம்மூன்று பொருளும் பயின்று வரும் பாடல்களும் உண்டு. முதற் பொருளின்றிக் கருப்பொருளும் உரிப்பொருளும் மட்டும் அமையும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் பெரும் பான்மையாக உள்ளன. கருப்பொருளும் இல்லாமல் உரிப்பொருள் மட்டுமே அமையும் பாடல்களும் பல உண்டு. முதலும் கருவும் இன்றிப் பாடல் அமையலாம்; உரிப்பொருளின்றிப் பாடல் அமையாது; உரிப் பொருளே பாடலின் அடிப்படை,

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை யென்ப

(தொல், அகத் : 1)

என்று அகத்திணை ஏழினை யும் குறிப்பிடும் தொல்காப்பியர்,