பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. வாகைப்பிரமணியன் 81

இக்குறட்பாவுக்கு உரையெழுதும் பரிமேலழகர், ‘விசும்பின் கட்டன்றன்மைத்தாய நீர் கிலத்தோடு சேர்ந்த வழி, கிறம், சுவை முதலிய பண்புகள் திரிங் தாற்போலத் தனிநிலைக் கட்டன்றமைத்தாயவறிவு பிறவினத்தோடு சேர்ந்த வழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியுமென இதனால் அதனது காரணம் கூறப்பட்டது’ என்று விளக்கம் கூறுகின்றார்.

கல்ல கிலத்தில்தான் நல்ல செடி கொடி மரங்கள் தோன்ற முடியும். களர் கிலத்திலோ உவர் கிலத்திலோ கல்ல பயிரினம் தோன்றாது.

கிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

(திருக்குறன் : 959)

என்றும் திருக்குறளில் இக்கருத்து விளக்கப் பட்டிருத்தலை அறியலாம். இதனையே பெண் கல்வி பற்றி விளக்கும் போது பாவேந்தர் பாரதிதாசனும், ‘கல்வியில்லா மகளிர் களர் கிலம் போன்றவர்கள்; அவர்களிடம் கல்ல மக்கள் எவ்வாறு தோன்றுவர்?” என்று வினவுகின்றார். மண்ணின் இயல்பு பயிரினத் திற்குப் பாதிப்பை உண்டாக்கும் என்பதை இலக்கிய நூல்கள் காட்டுகின்றன.

கிலம் ஒரு பெரும் சொத்தாக அமைந்திருந்து உயிர் வாழ்விற்கு இடமாகவும், உண்டு உயிர் வாழ்வதற்கு வேண்டிய பொருட்களை வழங்கும் கருவூலமாகவும் விளங்கியது. மனிதன் நாகரிகம் பெற்று, கிலத்தை உழுது பண்படுத்திப் பயிர் செய்து தனது உணவுத் தேவையை நிறைவு செய்து கொண்டான். கிலத்தைத் தனது வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டான்,

திருவள்ளுவரும்,