பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வாழ்வியல் நெறிகள்

கிலம், பொழுது என்று இருவகையால் அமைகின்றது. அப்பொழுதைப் பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும் இருவகைப்படுத்தினர். ஒருங்ாளைக் குரியதைச் சிறுபொழுது என்றும் ஒர் ஆண்டைப் பருவ கிலைகளாகக் கூறிடுவதைப் பெரும்பொழுது என்றும் அமைத்தனர்.

பெரும்பொழுது *

1. கார் காலம்-இது முல்லைத் திணைக்குரியது.

அதாவது மழைக்காலம். இது ஆவணி, புரட்டாசி

மாதங்களை உள்ளடக்கியது.

2. கூதிர் காலம் - குளிர்காலமாகிய இது குறிஞ்சித் திணைக்குரியது. ஐப்பசி, கார்த்திகைத் திங்கள்களை உள்ளடக்கியது.

3. முன்பனிப் பருவம்-குளிர் காலம். இது குறிஞ்சித் திணைக்குரியது. மார்கழி, தை மாதங்களை உள்ளடக்கியது.

4. பின்பணிப் பருவம்-இது பாலைக்குரியது. மாசி, பங்குனி மாதங்களை உள்ளடக்கியது.

5. இளவேனில் - வேனிற் காலம். பாலைத் திணைக்குரியது. சித்திரை, வைகாசி மாதங்களை உள்ளடக்கியது.

6. முதுவேனில்-வேனிற் காலம். ஆனி, ஆடி மாதங்களை உள்ளடக்கிய இப்பருவம் பாலைத் திணைக்குரியது. இவற்றுள் மருதம், நெய்தல், என்னும் இரு திணைக்கும் மேற்கூறிய ஆறு பெரும் பொழுதுகளும் ஒருமையுடையன.

- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS _