பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முல்லைத்திணைப் பாடல்களில்

கவிநயம்

தோற்றுவாய்

கன்னலும் கைக்கும் இன்னமுதாய், கவிதை மிகும் கலை அழகாய், இன்னல் மடியும் இசை வடிவாய், பொங்கும் ஞானத் தேனைச் சிந்தும் மங்கா எழில் மலராய், இலங்கும் தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் மிகப் பல. இவை அகம் புறம் என்ற இருபாகு பாட்டிற்குள் அடங்குவன. கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம, கெய்தல், பாலை, பெருக் திணை என்ற ஏழும் அகத்திணைகள். இவற்றிற்குப் புறனாக ஏழுபுறத்திணைகள் காணப்படுகின்றன. அகத்திணைகள் ஏழுனுள் கடுவனதாக அமைந்த ஐந்திணைஒழுக்கமே சிறந்ததாகப் போற்றப்படுகிறது. இவற்றில் ஐந்தில் ஒரு பகுதியாகத் துலங்கும் முல்லைத்திணையில் அமைந்த பாடல்கள் சிலவற்றில் கவிநயம ஆய்வதே இக்கட்டுரை.

உவமைகள்

பொதுவாக இலக்கியங்களில் உவமைகள் கவிஞரின் கருத்து வெளிப்பாட்டிற்காகவும், கருத் திற்கு விரைந்த ஒட்டவும் தரவும், உணர்ச்சி வெளிப்