பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வாழ்வியல் நெறிகன்

செறியிலைக் காயா அஞ்சனம் மலர -முல்லை.

என முல்லைப்பாட்டும்,

மணிபுரை யுழுவின காயா

என முல்லைக்கலியும் குறிக்கின்றன. இவை கான்குமே வண்ணம் பற்றி எழுந்த உவமைகளாகும்.

அடைவளம்

கவிஞனின் சொல்லாட்சித் திறமைக்கு முன்னோடி களாகவும், அவனது மொழிப்புலமைக்குச் சான்று பகர் வனவாகவும், அவனது நுட்பமான கோக்கினைசிந்தனைச் செறிவினைப் பறைசாற்றுவனவாகவும், அடைகள் அமைகின்றன. மேலும் கற்பார்க்குக் கவிதை இன்பம் கல்கவும், உணர்வினை மிகுவிக்கவும், சுருங்கச் சொல்லவும் விளங்க வைக்கவும் அடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

முல்லைத்தினைப் பாடல்களில் அமைந்த அடை களை கோக்கும்போது அவை இயற்கைப் படப் பிடிப் பாகவும், கவிஞனின் கற்பனைத் திறனை வெளிப் படுத்துவனவாகவும், பண்பாட்டுச் செய்திகளை விளக்குவனவாகவும் அமைகின்றன. சில அடைகள் செயற்கை வெளிப்பாடுகளாகவும், மாதர் வருணனை களாகவும் அமைகின்றன.

குறுந்தொகையில் ஒன்று முதல் மூன்றுவரை உள்ள அடை அமைப்புகள் உள்ளன. இவை பெரும் பாலும் இயற்கை வெளிப்பாடுகளாகவும், செயற்கை

வெளிப்பாடுகளாகவும் அமைகின்றன.