பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலசுப் பிரமணியன் 45

வணர்ஒலி ஐம்பாலாய்-முச்சொல் பொறிமாண் புனைதிண்டேர்-காற்சொல்

நறுநுதற் செல்வமழை மதர்க்கட் சின்மொழிப்

பேதை -ஐஞ்சொல்

பொதுவாக கோக்கும்போது முல்லைப்பாட்டு, முல்லைக்கலி, கார்காற்பது இவற்றில் அடைகள் சிறந்து விளங்குகின்றன.

சொல்லாட்சி

ஏற்ற சொல்லை ஏற்ற இடத்தில் பயன்படுத்தி இனியதொரு பொருளைப் பெறவைப்பதைச் சொல் லாட்சிச் சிறப்பு’ என வழங்குவர் மேல்காட்டார். ஒரு சில சொற்களின் மூலம் உயர்ந்த பொருளை வடித்துக் காட்டுகின்ற நிலையும் உண்டு. ஒரு தொடரின் மூலம் சிறந்த பொருளை வெளிப்படுத்துதலும் உண்டு. உலக வழக்குச் சொற்களை இலக்கிய வழக்கில் அமைத்து அதன் மூலம் தன் கருத்துக்களைப் பயன்படுத்துதலும் உண்டு. கவிஞனின் சிந்தனைச் செறிவினையும், கற்பனை வளத்தினையும், அவன் பயன்படுத்துகின்ற சொற்கள் அறிவித்து நிற்கின்றன. உணர்ச்சி வெளிப் பாடுகளை ஒரு சில சொற்களில், உணர்த்திவிடும் திறத்தில் சங்க இலக்கியங்கள் த ைல சி றடுக் து கிற்கின்றன.

கானம் காரெனக் கூறினும் யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே என்பதில் பொய் வழங்கலரே என்ற ஒரு சொல்லின் மூலம் தலைமகன் பண்புகளையும், தலைமகள் பண்பு களையும் புலப்படுத்தி கிற்கின்றார் ஆசிரியர்.