பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

46 வாழ்வியல் நெறிகள்

இயற்கையே கார்காலத்தின் வரவைக் காட்டிய போதிலும் கார்காலத்திலும் வருவதாகக் கூறிச் சென்ற தலைமகன் வரவில்லை. ஆதலின் தான் அதனைக் கார்காலமாகக் கருதமாட்டேன் எனக் கூறுகின்றான் தலைமகள். இதனால் தலைமகள் தலைமகன் மாட்டுக் கொண்ட அன்பினையும், தலைமகன் சொல்லில் அவள் கொண்ட உறுதிப்பாட்டினையும், தலைமகன் பொய் வழங்காதவன் என்ற அவன்தன் கம்பிக்கையும் புலனாகிறது. இந்த ஒருசொல்லின் வழி பல்வேறு கருத்துக்களைப் படைத்துக் காட்டும் ஆசிரியரின் திறம் அவர்தம் சொல்லாட்சிச் சிறப்பிற்குத் தக்கதோர் சான்றாகும்.

புலவர்தம் கவிதையில் அமைகின்ற உள்ளுறை யும் அவர்தம் சொல்லாட்சித் திறனைப் புலப்படுத்தி கிற்கும். இவ்வாறு கேரே கூற முடியாத பொருளை உள்ளுறையில் அமைத்துக் கூறும் திறத்தினை கற்றிணையில் காண்கின்றோம்.

................. கானவாரணம் பெயனிர் போகிய வியனெடும் புறவில் புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி நாளிரை கூற மாட்டித்தன்

பேடை நோக்கிய பெருந்தகு கிலையே

ーpf)・2F

என்பதே அப்பகுதி. தலைவன் தலைவியோடு கூடி யிருக்கும் கிலையை ஆவலோடு எதிர்பார்க்கும்

நிலையை இதன்வழி வெளிப்படுத்துகின்றார் ஆசிரியர். அககானுாற்றில்,