பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வாழ்வியல் நெறிகள்

மீன்பூத் தவிர்வரும் அந்திவான் விசும்புபோல் வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும்

என்ற கற்பனை மலர்கிறது.

கார்காற்பதின் ஆசிரியர் மஞ்ஞையை மகளிராகக் கற்பனை செய்கின்றார். குறுக்தொகை ஆசிரியர்க்கோ கொன்றை மரங்கள் நிறைந்து விளங்கும் கானம் மகளிராகத் தோன்றுகிறது.

வண்டுபடத் ததைந்த கொடியினர் இடையிருபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற்றோன்றும் புதுப்பூங் கொன்றை கானம். -

-குறுந். 21

இயைபுக் கற்பனை

கருத்து வகையிலோ, காட்சி வகையிலோ ஒரு நிகராகத் தான் கண்டவற்றை இணைத்துக் காட்டுவது இயைபுக் கற்பனையாம். முல்லைப்பாட்டு கார்காற்பது, முல்லைக்கலி ஆகிய இலக்கியங்களில் இவ்வகைக் கற்பனையை மிகுதியாகக் காண முடிகிறது. குறுக் தொகையிலும் கற்றிணையிலும் இவ்வகைக் கற்பனை யைக் காண முடிவதில்லை.

முல்லைக் கலியில் காளையின் வலிமையை மாவின் வலிமைக்கு இயைபுபடுத்தி உரைக்கப் படுகிறது.

பொருமுரண் வேம்பட்ட பொலம் புனை புகழ்நேமித் திருமறு மார்பன்போல் திறல்சான்ற காரி.