பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

56 வாழ்வியல் நெறிகள்

அக்காலத்தில் சமுதாயத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வை உணர்த்த கினைத்த கவிஞர் அதனையே கற்பனையாக்கி உரைக்கும் திறம் போற்றற்குரியது. இக்கருத்துவிளக்கக் கற்பனையை கார் காற்பதில் மட்டுமே காண முடிகிறது. மற்ற இலக்கியங்களில் இவ்வகைக் கற்பனையைக் கான முடிவதில்லை.

மெய்ப்பாடுகள்

தொல்காப்பியர் உணர்த்தும் மெய்ப்பாடுகள் சில இம்முல்லைத் திணைப் பாடல்களில் அமைந்து கவிநயத்தை மிகுவிக்கின்றன.

புலனணி கொண்ட காரெதிர் காலை ஏந்துகோட் டியானை வேந்தன் பாசறை வினையொடு வேறுபுலத் தல்கி நன்றும் அறவரல்லர் கம்அருளா தோரென கங்நோய் தன்வயின் அறியாள் எங்கொங்து புலக்குங்கொல் மாஅ யோளே

-அகம். 304

என்று தலைமகன் தலைமகளுக்காக வருந்துவது வருத்தம் காரணமாக வந்த அவலமாகும். இதனால் அவனும் அவளும் ஒருவருக்காக ஒருவர் வாழுகின்ற நிலையை அறிய முடிகிறது.

செய்வினை அழிந்த மையல் நெஞ்சில்

துனிகொள் பவேரல் தீர வந்தோய்

இனிதுசெய் தனையால் வாழ்ககின் கண்ணி

-ஆகம். 314