பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 57

என்ற தோழி கூற்று தலைமகள் வரவினால் கொண்ட

மகிழ்ச்சியை விரிப்பதாக அமைகின்றது. இது உவகை

பற்றி எழுந்த உவமையாகும்.

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர் என்னை யின்றியுங் கழிவது கொல்லோ ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்து எழுகுன்று மிதித்த ஒருபழம் போலக் குழையக் கொடியோர் காவே காதலர் அகலக் கல்லென் றவ்வே

என்ற தலைவி கூற்று வருத்தம் பற்றி வந்த அவலத் திற்குச் சான்றாகும். குறித்த காலத்தில் தலைவன் வராமையால் ஆற்றாமை மிக்க தலைவியின் வருத்தம் இப்பாடலில் கன்கு புலப்படுத்தப்படுகிறது.

இன்றுயில் வதியுநற் காணாள் துயருழந்து நெஞ்சாற்றுப் படுத்த கிறைதயு புலம்பொடு நீடுநனைந் தேற்றியும் ஓடுவளை திருத்தியும் மையல் கொண்டு மொய்யென வுயிர்த்தும் எவுறு மஞ்ஞையின் நடுங்கி யிழை நெகிழ்ந்து. மாத்திரளருவியின் இன்பல் இமிழிசையை ஒர்ப்பன ளாகக் கிடக்கும் தலைமகளின் கிலையை அவள்?தன் ஆருயிர்த் தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட வருத்தத்தைத் தெற்றென விளக்குகின்றன.

சென்றநங் காதலர் சேணிகங்தாரென்று ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர வென்றி முரசி னிரங்கி யெழில்வானம் கின்று மிரங்கு மிவட்கு எனத் தோழி தலைமகளுக்காக இரங்குவது வருத்தம் பற்றி எழுந்த அவலமாகும்.