பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வாழ்வியல் நெறிகள்

இவ்வாறாக இம்முல்லைத் திணைப் பாடல்கள் பலவும் அவல உணர்ச்சியின் வெளிப்பாடுகளாகத்

திகழ்கின்றன.

தனிச் சிறப்புகள்

பொதுவாக ஒரு சில கூறுகளில் இம்முல்லைத் தினைப் பாடல்கள் ஒப்பிடத்தக்கனவாக இருந்தபோதி லும் ஒவ்வோர் இலக்கியமும் பல தனிச்சிறப்புகளைக் கொண்டு திகழ்கின்றன.

கார்காற்பது முழுக்க முழுக்க கார் க | ல ச் சிறப்பையும், கார்காலத்தில் தலைமகள் நிலையையும், பாசறையில் தலைமகன் நிலையையும், தலைமகனை கினைந்து வாழும் தலைமகளைத் தேற்றும் தோழியின் நிலையையும் விளக்குகின்றன. தோழி கூற்று, தலைமகன் தன்னெஞ்சிற்குக் கூறுவது, தேர்பாகற்குக் கூறுவது என இரு கூற்றுவகை காணப்படுகிறது. இவை சிறந்த நாடக கலம் பெற்றவையாகும்.

முல்லைக்கலி முழுக்க முழுக்க ஆயர் வாழ்க்கை யின் படப்பிடிப்பாகக் காட்சியளிக்கின்றது. பாரதக் குறிப்புகளையும் புரானச் செய்திகளையும் தந்து நிற்பது முல்லைக்கலியின் சிறப்பாகும். பாண்டியனின் குடியோடு ஒப்ப வைத்து கோக்கத்தக்கது ஆயர்குடி என அதன் ஆயர்குடியின் மேன்மையைச் சிறப்பித்து உரைப்பது இதன் தனிச்சிறப்பு சங்க இலக்கியங்களில் காணப்படாத பல கடவுளர் முல்லைக் கலியில் காணப் படுகின்றனர். பிற இலக்கியங்களைப் போன்று இது தலைவன் தலைவி இருவரின் இருத்தலைப் பற்றிக் கூறவில்லை.