பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வாழ்வியல் நெறிகள்

வயல் வினை யின்குளருண்ணாது நுதல்துடைத்து அயில்துணை மருப்பிற் நம் கையிடைக் கொண்டென கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்ப” *

என்பது முல்லைப்பாட்டு:

மறவரின் அரண்கள்

பாசறைக்கண் பல்வேறு மறவர்க்குரிய அரண்கள் இருந்தமையைக் கூறுகின்ற ஆசிரியர் கப்பூதனார் அவை அமைந்த திறத்தை விளக்குகின்றார். காணிக் கல்லிலே தோய்ந்து உடுத்த உடையை உடைய வனும், முக்கோலை உடையவனுமாய அந்தணன் அம்முக்கோலை கட்டு அதன் மேல் அவ்வுடையை இட்டு வைத்த தன்மை போல மறத்திலும் அறம் வழுவாத போரிலே வெங்கிற்று ஒடாமைக்குக் காரண மான வலிய வில்லைச் சேர ஊன்றி அவற்றின்மேல் துணிகளைத் தொங்க விட்டுக் கூட்டமாகக் கால்களை கட்டுப் பின் கிடுகுப் படைகளை கிரலாகப் பினைத்துப் பல்வேறு அரண்களை அமைத்தனர் στoστά, கூறுகின்றார். இதனை ,

கல்தோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசை நிலை கடுப்ப நற்போர் ஓடா வல்லில் துாணி காற்றிக் கூடங்கத்திக் கயிறு வாங்கிருக்கை பூந்தலைக் குறிதம் குத்திக் கிடுகு கிரைத்து வாங்குவில் அரணம் அரணமாக வேறு பல் பெரும்படை’

என்ற பகுதியால் உணரலாம்.