பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டர்க்டரி சி. பாலசுப்பிரமணியன் 71

மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்’

ான்பவர்கள் ஒரு வகையினர்.

உடம்பின் உரைக்கும் உரையா காவின் படம் புகு மிலேச்சர்”

என்பவர்கள் ஒரு வகையினர். இவர்கள் புலித்தொடர் விட்ட புனைமாண் கல்லில்லில் மனிவிளக்கை எரிய வைத்துக் கொண்டு திண்காண் எழிலில் வாங்கிய ஈரறைப் பள்ளியுள் உள் அறையாகிய பள்ளி அறையின்கண் அரசனின் உழையராய் இருந்து காவல் புரிகின்றனர்.

மன்னன் மனநிலை

இவ்வாறாகப் பாசறையில் இருந்த மகளிர், மெய்க் காப்பாளர், நாழிகைக் கணக்கர், யவனர், மிலேச்சர் இவர்கள் துழல இருந்த மன்னனின் மனநிலையை அடுத்து உரைக்கின்றரர். வினைமுற்றியிருந்த தலை மகன் பகைமேற்செல்லும் விருப்பத்தால் உறக்கங் கொள்ளாமல், முன்னாளில் பகைவர் எறிந்த வேல் நுழைந்தமையால் புண் கூர்ந்து அதனால் வருத்த முற்றுத் தம் பெண் யானைகள் மறந்த களிற்று Ա IIT GԾ) 5Ծl 5H 6Ծ) GT கினைந்தும், யானைகளின் பரிய கைகளை வெட்டி வீழ்த்தித் தாம் அணிந்த வஞ்சின மாலைக்கு வெற்றி உண்டாகும்படிச் செஞ்சோற்றுக் கடன் கழித்த மறவர்களை கினைந்தும், வைந்துணை பகழி மூழ்கலினால் புண்மிகுந்து அத் துன்பத்தால் புல்லுண்ணாமல் செவிசாய்த்து வருந்துகின்ற குதிரை களை கினைந்தும்,