பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - வாழ்வியல் நெறிகள்

பகுதியிலும் இறுதிப் பகுதியிலும் அமைத்துக் காட்டு கின்றார்.

தலைமகன் மீளல்

விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருஇவ் பெருவிறல் வானம் பெருவரை சேருங் கருவணி காலத்தில் வருதும் என மொழிந்து சென்ற தலைமகன் வினைமுற்றி மீண்டு வருகின்றான். வேண்டுபுலங் கவர்ந்த ஈண்டு பெருந் தானையோடு விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு வயிரும் வளையும் ஆர்ப்பவும் அயிரவும்,

செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியினர்க் கொன்றை கன்பொன் காலக் கோடற் குவிமுகை மங்கை யவிழ்த் தோடர் தோன்றிக் குருதி பூப்பக் கானம் கந்திய செங்கிலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வாகின் திரிமருப் பிரலையொடு மடமானு கள எதிர்செல் வெண்மழை பொழியுங் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடு25

பின்னாகும்படி வருகின்றான் தலைமகன். தலை மகனின் வினைவிளங்கு நெடுங்தேர் பூண்ட மாவின் குளம்படி ஒசையானது அரசிருந்து பணிக்கும் முரசு முழங்குபாசறையின் இன்துயில்வதியுகனைக்கானாது இடஞ்சிறந் துயரிய எழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரும் மாத்திரள் அருவியின் இன்பல் இமிழிசை ஒர்ப்பனள் இடந்தோளாய தலைமகளின் அம்செவி நிறைய ஆலின என்று முடிக்கின்றார் ஆசிரியர். இதனால் தலைமகனும் சொன்ன சொல் தவறாமல் இருக்கின்ற பான்மையை உணர்த்தி கிற்கின்றார்.