டிாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 75
தலைமகன் மீண்டும் வருகின்ற நிலையைக் கூறாமல் விடுத்திருந்தால் இம்முல்லைப்பாட்டு முழுமை பெற்ற தாகாது. தலைமகனும் தன் பண்பில் குறைந்தவனா யிருப்பான். இவற்றைத் தவிர்க்கவே ஆசிரியர் கப்பூதனார் தலைமகன் மீண்டு வருகின்ற காட்சி களையும் அமைக்கின்றார்.
இறுவாய் _
இவ்வாறாக முல்லைப்பாட்டு ஆசிரியர் கப்பூத னார் பாடலின் தொடக்கத்தில் கடனிர் முகந்த கமஞ்சூல் எழிலி குடமலை யாகத்துக் கொள்ளப்பு இறைக்கும் காலத்தில் திரும்பி வருவதாகக் குறி செய்து பிரியத் தலைமகன் அவன் பிரிவை ஆற்றாது வருந்துகின்ற மையைக் கூறிப் பின்னர் அவன் கூறிச் சென்றபடி தன் கற்பு ஒழுக்கத்திற்கேற்றபடி இல்லிருந்து ஆற்று கின்றமையைப் பின் கூறுகின்றார். இடைப்பகுதியில் தலைமகன் தலைமகளைப் பிரிந்து பாசறை வீட்டில் இருக்கின்றமையைக் கூறுகின்றார். இவ்வாறு தலைமகன் தலைமகள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து தத்தமக்குரிய இடத்தில் சொற்றிறம்பாம் இருப்பதாகக் கூறும் இருத்தல் கிமித்தத்தை விளக்கி நிற்பதால் வஞ்சிதானே முல்லையது புறனே” என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு இயைய முல்லைப்பாட்டு அமைந்துள்ளது எனத் துணியலாம்.
பாடி வீட்டின் அமைப்பு
எஞ்சா ம்ண்ணாசை காரணமாக வந்த வேந்தன்
மேல் தன் வீரத்தை நிலைகாட்டுதற்காகச் சென்ற
முல்லைப்பாட்டுத் தலைமகன் அவன் வீரர்களுடன்