பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 81

தமிழின் போக்கைக் காண்கிறோம். திருமால் மண்ணுலகில் இராமனாகவும், கண்ணனாகவும் அவதரித்துத் திருவிளையாடல்கள் புரி ங் த ன ர். குலசேகர ஆழ்வார் முதலிய அடியார்கள் திருமாலின் பிள்ளைப் பிராயத்தைப் போற்றிப் பாடுகின்றனர்.

மன்னுடிகழ்க் கெளசலையின் மணிவயிறு வாய்த்தவனே தென்னிலங்கைக் கோன் முடிகன் சிந்துவித்தாய்

செம்பொன்சேர் கன்னிகன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென்

கண்மணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

என்று இராமனையும்,

தண்ணங் தாமரைக் கண்ணனே கண்ணோ

தவழ்ங்தெழுந்து தளர்ந்ததோர் கடையால் மண்ணிற் செம்பொடி ஆடிவந்து என்றன்

மார்பின் மன்னிடப் பெற்றிலேன் அங்தோ வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும்

வாரிவாய்க் கொண்டவடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன்

என்னை என்செயப் பெற்ற தெம்மாயோ?

என்று கண்ணனையும் அவர் அழகொழுகப் பாடு கின்றார்.

தொல்காப்பியர் காலத்தில் வித்திடப்பெற்று மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்ற பிள்ளைத்தமிழ் கி. பி. 8ம் நூற்றாண்டில் ஆழ்வார்களின் காலத்தில் இலக்கிய அங்கமாகும் தகுதி பெற்று கி.பி. 12ம் நூற்றாண்டில் முழு சிற்றிலக்கியங்களாக உருப் பெற்றது.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆசிரியரும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தர் இரண்டாம்