10 வாழ்வியல் நெறிகள்
மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நீ lஇத் தாமாய்க் தனரே
-புறநானூறு 165 : 1.2
என்று புறகானுாறு புகலும்.
முதலாவதாக, நமக்கு வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்கள் இருக்க வேண்டும். அவ்வாறு உயர்ந்த குறிக்கோள்களை அடையப் பாடுபடும் பொழுது, அவ்வுயர்ந்த இலக்குகள்-குறிக்கோள்களை அடைய முடியாமற் போனாலும் கவலையில்லை என்பதனை முயல் வேட்டையாடி மனம் முறிந்து போவதைவிட, யானை வேட்டையாடித் தோற்றுப் போவது மேல் என்பார் திருவள்ளுவர்.
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
-திருக்குறள் படைச்செருக்கு 1
எனவே உயர்ந்த குறிக்கோள்கள் மனித வாழ்க்கை யின் இலக்காக அமைய வேண்டும். அப்பொழுதுதான் சில அரிய செயல்களை நமக்காகவும் சமுதாயத்திற் காகவும் ஆற்ற முடியும்.
“கன்றே செய்தல் வேண்டும்; கன்றும் இன்றே செய்தல் வேண்டும்; இன்றும் இன்னே செய்தல் வேண்டும்’ என்பது கபிலரகவல். எனவே எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பதற்கு வேண்டிய முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
முதலாவதாக, ‘புகழும் இன்பமும் அறமும் ஆகிய இம்மூன்றும் சோம்பல் உடையாரிடம் தவறிக்கூட உண்டாவதில்லை’ என்று கம் முன்னோர் கண்டனர்.