பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

86 வாழ்வியல் நெறிகள்

எனவரும் பிள்ளைத்தமிழ் நூற்பாவில் காரணம் காட்டப்பட்டுள்ளன. ஆயினும் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ், சத்திய ஞான பண்டாரம் பிள்ளைத் தமிழ் ஆகியவற்றில் முறையே 5வது பாடலிலும், 8வது பாடலிலும் திருமாலை விடுத்துப் பாடியுள்ளது உணரத்தக்கது. மீனாட்சி சுங் த ர ம் பிள்ளையின் சேக்கிழார் பிள்ளைத் தமிழில் காப்பிற்குரிய தெய்வங் களை எல்லாம் விடுத்துத் திருத்தொண்டத் தொகை செய்யுள் முறைப்படி அமையும் அடியவர்களைக் காப்புப் பருவத்தில் ைவ த் து ப் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

காப்புப் பருவம் பற்றிச் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் ஏதும் இல்லை. காந்தி பிள்ளைத்தமிழும் கடவுள்களை முன்னிறுத்திப் பாடாமல் ஒன்றே தேவன் என்ற முறையில் அமைத்துப் பாடப்பட்டது. வழிபடு தெய்வம் காக்க என வேண்டுவதால் பாட்டுடைத் தலைவன் பழு தி ன் றி கோயற்று 6) 1ՅՈTՈI 6) 1T6ԾT -

செங்கீரைப் பருவம்

காப்புப் பருவத்தை அடுத்து அமைவது செங் கீரைப் பருவம். 3 முதல் 5 திங்கள் வரை இப்பருவம் அமையும். குழந்தை தவழ்ந்து வீழும் பருவம். இப் பருவத்தில் குழந்தையின் மழலைச் சொல் கேட்கின்ற நிலை அமையும். பொருள் அறியாப் பெரும்மொழி பேசும், குழவிகளின் மழலைச் சொற்களில் மயங்கித் தாயார் அக்குழந்தையைச் செங்கீரை ஆடுமாற். பாடுதல் செங்கீரைப் பருவம் ஆகும். அக்குழந்தை களின் செயலைக் குறித்துப் பாட ப்படுவது செங்கீரைப்