பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாசிடரி கி. பாலசப்பிரமணியஆ. 91

பிள்ளைத்தமிழ் நூல்கள்

இத்தன்மையைப் பிள்ளைமையின் செழிப்பை எல்லாம் செந்தமிழில் காட்டிய பிள்ளைத்தமிழ் நூல்கள் பல. அவற்றுள் சிறந்தனவாகப் போற்றப் பெறுவன குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமிப் பிள்ளைத்தமிழ், பகழிக் கூத்தரின் தி ரு ச் .ெ சங். து ர் ப் பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், போன்றவையாம். மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அ கி லா ண் ட காயகி பிள்ளைத்தமிழ் என்ற மூன்றும் பெண்பாற் பிள்ளைத்தமிழாம்.

சங்க இலக்கியத்தில் இடம்பெறும் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள்

சங்க இலக்கியத்தில் இடம்பெறும் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களாக வாரானை, சிறுபறை, சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், அம்மானை, நீராடல் முதலியன அமைகின்றன.

பாண்டியன் அறிவுடை கம்பியின் பாடலான

“படைப்பும் பல படைத்துப் பலரோடு உண்ணும்’ என்ற பாடலில் வாரானைப் பருவத்தில் குறிப்பு அமைகிறது.

அககானுாறு 54ஆம் பாடலில் அம்புலிப் பருவம் பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.

சிறுபறை பற்றிய குறிப்பு சிறுபாணாற்றுப் படையில் அமைகிறது. குழந்தை கிலுகிலு வைத்து ஆடுதல் குறிக்கப்படுகிறது. -- =