உாக்டா ੇ . பாலசுப்பிரமணியன 97
புதுவதாக மணம்புரிந்து கொண்ட இனிய இளைய இல்லாள் ஒருத்தி தன் கணவன் உண்னும் பொருட்டு அவன் பெரிதும் விரும்பும் மோர்க்குழம்பினைப் பக்குவ மாகக் கூட்டினாள். கட்டித் தயிரினைத் தன் காந்தள் மலரொத்த மென்கைகளாற் பிசைந்து எடுத்துக் கொண்டு மோர்க் குழம்பாக்கினாள். தயிர் பிசைந்த கைகளைத் தன் சேலையில் துடைத்துக் கொண்டு, தாளிப்பு கேரம் வந்துவிட, தன் குவளைக் கண்களில் சூழும் புகை முழுவதையும் பொருட்படுத்தாமல் மோர்க் குழம்பு கூட்டுவதிலேயே கருத்தாயிருந்தாள். கணவன் உணவிற்கென வந்து உட்காரத் தான் அரும் முயற்சி மேற்கொண்டு கனிவுடன் கூட்டிய மோர்க்குழம்பினை உண்கலத்தில் பரிமாறினாள். மோர்க்குழம்பின் இனிய சுவை கணவன் உள்ளத்தில் மகிழ்ச்சியை மிகுவித்தது. எனவே இனிது இனிது’ என்று மோர்க்குழம்பின் சுவையைப் பாராட்டிக் கொண்டே மனைவிமாட்டுத் தன் பாராட்டைப் புலப்படுத்தினான். பாராட்டைக் கேட்ட மனைவியின் முகம் நுண்மையாக மலர்ந்தது. இவ்வினிய இல்லறக் காட்சியைப் புலப்படுத்தும் ‘கல்ல குறுக்தொகை"யின் கல்ல பாட்டு வருமாறு:
முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந் தட்ட தீம் புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று உண்ணுதல் முகனே,
-குறுந்தொகை 167
எனவேதான் கோசலை காடுடை வள்ளல் இராம பிரானைப் பிரிந்திருக்கும் அசோகவனச் சீதையும் தன் வருத்த கிலையை மாருதிக்குப் புலப்படுத்தும்