பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so . . . . . . . 98 வாழ்வியல் நெறிகள்

கோலத்தில் கிற்கும் கிலையினைக் கம்பகாடர் பின் வருமாறு காட்டுவர்.

அருங்தும் மெல்லடகு யாரிட

அருந்துமோ என்று அழுங்கும் விருந்து கண்டபோது

என்னுறுமோ என்று விம்மும் மருந்தும் உண்டுகொல்

யான்கொண்ட கோய்க்கு என்று மயங்கும் இருந்த மாநிலம் செல்லரித்திடவும்

ஆண்டெ ழாதாள்.

-கம்பராமாயணம்; சுந்தர காண்டம்; காட்சிப் படலம்: 15

என்று தவம் செய்த தையலாம் சனகன் மகளைக் காட்டுகின்றபோது, தான் இராமபிராமனுக்கு விருப்ப மான இலையமுதைச் சமைத்துப் போட இயலாத கிலையினையே முதற்கண் சுட்டியதனைக் காண்க.

கோவலன் மதுரை ஆயர்பாடியில் மாதவி விட்டி லிருந்து சிலம்பு விற்பதற்காகக் கண்ணகியிடமிருந்து விடைபெற்றுச் செல்லுமுன், சிலம்பு தந்த செந்தமிழ்க் கவிஞர் இளங்கோவடிகள் கண்ணகி கோவலன் பொருட்டுச் சமைத்து அறுசுவை உணவு படைத்த அருங்காட்சியினையே நமக்குக் காட்டுகின்றார். குமரி வாழையின் குருத்தையரிந்து தாலத் தடுக்கிட்டுப் பரிமாறி அம்மென்திரையலோடு அடைக்காய் ஈந்த திறத்தினை இளங்கோவடிகளின் இன்தமிழ்ச் சொற் களில் கண்டு சுவைக்க வேண்டும்.

எனவே திருமூலர் நிலையாமையினை உணர்த்து வதற்குத் தேர்ந்தெடுத்த காட்சியிலும் இந்தக் காட்சி இடம்பெறத் தவறவில்லை. அரிதில் முயன்று