o ** ‘. டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 99
பொருளிட்டி வந்த கணவன் மனைவியிடம் அவற்றைத் தந்து சிறந்த முறையில் அன்று உணவு அமைய வேண்டும் என்று குறிப்பிட்டான். தமிழ்நாட்டு மகளிர் சமையற்கலையில் வல்லுகரன்றோ? அதிலும் கணவன் அகமும் முகமும் மலர அருமையாகச் சமைத்து அன்போடு பரிமாறிப் பண்போடு உபசரிப்பதில் உலகின் முன்னணியில் நிற்பவரன்றோ? எனவே மங்கை கல்லாளும் தன் கைத்திறமெல்லாம் காட்டி, கைப்பாகமெல்லாம் கூ ட் டி ச் சமைத்திருந்தாள். கணவனும் மிக விரும்பியுண்டான். உண்டவுடன் கணவனும் மனைவியும் மகிழ்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்துச் சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இவ்வாறான மயக்கம், நிலை சற்று நேரமே நீடித்தது. திடீரென்று கணவன் தன் இடப்பக்க மார்பு சிறிது வலிக்கிறது என்றான். மனைவி ம. ரு த் து வ ர் உதவியினை காடிப் பெறுவதற்கு முன்னாலேயே கீழே சாய்ந்து படுத்தான். அவ்வளவில் அவன் உயிர் உடற் கூட்டை விட்டுப்பறந்து சென்றது. இதனைத் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுவர்.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறைகொங் ததுஎன்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிங் தாரே.
-திருமந்திரம்! 148
இவ்வளவோடு கின்று விடுகின்றாரா திருமூலர் என்றால் இல்லை. மேலும் உடம்பு நீறாகி மற்றவர் கினைப்பு வேறாகும் வரை காட்சித் திரையைக் காட்டுகின்றார். இறந்தவனைச் சுற்றி உற்றாரும் கி.முவினரும் நண்பரும் காட்டாரும் ஒலியெழுப்பி