பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

ளுக்கு ஒரு எண்ணம் உதித்தது. கடிதத்தை மகன் சரியாகப் படிக்கிறானோ இல்லையோ என்ற சந்தேகம் போய்விட்டது. எழுதிக் கொடுப்பவர்கள் சரியாக எழுதிக் கொடுக்கிறார்களோ இல்லையோ என்ற சந்தேகமே ஏற்பட்டுவிட்டது. எனவே, கடிதத்தை எடுத்து டாக்டரிடம் கொடுத்து, 'அக்கரையிலே இருக்கிற என் மகனுக்கு அனுப்ப இந்தக் கடுதாசி - படித்துச் சொல்லுங்கோ டாக்டர். அந்தச் சிறுக்கி கிறுக்கினா; சரியா இருக்குதான்னு பார்க்கலாம்' என்று சொன்னாள். டாக்டர் கடிதத்தைப் பிரித்தார் - சிரிப்பு வந்து விட்டது!
"என்ன டாக்டரு! சிரிக்கறிங்க"
"யார் பாட்டியம்மா, கடுதாசி எழுதி கொடுத்தது"
"அவதான் - வள்ளி ஒரு மாதிரியானவள்னு ஊர்லே பேசுவாங்களே, அந்தக் குட்டி - அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியும்"
"போக்கிரிப் பெண்ணு, பாட்டியம்மா அந்த வள்ளி! கடுதாசியிலே, எழுத்தே கிடையாது- கோலம் போட்டு வைத்திருக்கிறா.............!
"என்னாது........ கோலம் போட்டிருக்காளா... பாவி நான் சொல்லிக்கொண்டே இருந்தேன் அவ எழுதிகிட்டே இருந்தா....
"உன்னை அந்தப் பெண்ணு ஏமாத்தி விட்டிருக்கா, இருக்கட்டும் பாட்டியம்மா, நான் பார்த்துக் கண்டிக்கிறேன்.
இப்பத்தானே எனக்கு சூட்சமம் புரியுது. என் மகன் பேரிலே கோபித்துக் கொண்டேன் நானு, இந்தச் சூட்சமம் தெரியாததாலே. இந்தப் படுபாவிங்க ஒவ்வொருத்தரும், நான் கடுதாசி எழுதிக் கொடுக்கச் சொன்னபோதெல்லாம், இந்த வள்ளி செய்ததுபோலச் செய்துதான் என்னை ஏமாத்தியிருக்கிறாங்க. என் ஆசை மகனுக்கு ஒரு கடுதாசியும்