பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16



“என்னா விரோதம் என்னிடம்? உன் சொந்தத் தாயார்தானே ?”

“என்னைப் பெத்தவங்கதான், குழைந்தையிலேயே என்னை இங்கே கொடுத்து விட்டாங்க—இங்கேன்னா, இதுவும் 'அன்னியரில்லா, அசலாரில்லா, —எங்கே சின்னம்மா வீடுதான்.”

“உங்க சின்னம்மாவிடம் விரோதமா?”

“ஒரு இழவும் கிடையாதுங்க. ஆனா இங்கே நான் வந்ததிலே இருந்து, எங்க அம்மா காலடி எடுத்து வைக்கறதில்லே. அது என்ன வைராக்கியமோ, போங்க. என் கலியாணத்துக்குக்கூட, பத்துபேர் வாரதுபோல வந்துவிட்டு, ஒருவேளை கையை நனைச்சிகிட்டுப் போனதுதான், நான் காலிலே விழுந்து கும்பிட்டுக் கூப்பிட்டாக் கூட வரமாட்டேங்குது—காரணம் சொல்றதில்லே—எனக்குச் சிலசமயம் வருகிற கோபம், அதைவெட்டிப் போட்டுவிடலாமான்னு கூடத்தோணுது போங்க. “உங்க அம்மா அங்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கறாடாப்பா, ஏன் அப்படி அவளை அலையவிடறே”ன்னு யாராவதுகேட்டா, என் மனசு என்னா பதறிப்போகும், நீங்களே சொல்லுங்க. இப்படி என் மனசை எரியச் செய்துகிட்டு, அங்கே கிடக்குது, நான் என்னசெய்ய?”

“சன்னாசி! கோபிக்காதே! உன் சம்சாரத்தேட எதாச்சும்.......”

“அவ ‘அப்பிராணிங்க’—மாமியார் காலிலே விழுந்து குப்பிட்டா புண்ணியம்னு எண்ணுகிறவ. அவளும், அவளாலே ஆனமட்டும் கூப்பிட்டுப் பாத்தாச்சி. நம்ம ‘கொழந்தை’கள் கூப்பிட்டே வரலே, போங்களேன்”

“என்னப்பா இது அதிசயமா இருக்கு”

“அதிசயமா? அக்ரமம்னு சொல்லுங்க டாக்டரய்யா! வர்ர பழி வரட்டும்னு அதை அடிச்சுக்