பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

கொண்ணு போடலாமானுகூட ஆத்திரம் வருது, தெரியுங்களா"
டாக்டர் பாதிரியப்பனுக்குப் பச்சிலை ஆராய்ச்சியிலே கூட மனம் செல்லவில்லை. இந்தக் கிழவியின் விசித்திரப் போக்கு அவருக்கு மனக் குழப்பமே உண்டாக்கிவிட்டது. கிழவியைக் கண்டே கேட்பது என்று தீர்மானித்தார்.

*

"அவன் பேச்சை மட்டும் எடுக்காதிங்க........
"அவன் நல்லவனா இருக்கானே பாட்டி"
"தங்கமானவன்....அவன் சம்சாரமும் குணசாலி... எவ்வளவோ அன்பாத்தான் என்னை கூப்பிடறாங்க......ஆனா.........
"என்ன அ னாவும் ஆ வன்னாவும்........"
"அவன், என் மகனில்லிங்க...."
"உன் மகனில்லையா....உனக்கென்ன வள்ளி சொன்னதுபோல, மூளை குழம்பி இருக்குதா.....உன் மகன் இல்லையா.....
"நான் பெத்தவன் தான் சன்னாசி....ஆனா....டாக்டரய்யா, இதை மனசோடே போட்டுவையுங்கோ .......முக்கியமா அவனுக்குத் தெரியப்படாது..... தெரிந்தா குடும்பத்துக்கே ஆபத்து.... நான் தான் பெத்தேன். ஆனா, அவன் பேய் மகன்....?"
"பைத்யமே தான் உனக்கு, பேய் மகனாவது பூதத்தின் மகனாவது..... என்ன கிழவி உளறிக் கொட்டறே...."
"உங்களுக்கெல்லாம், என்ன தெரியும்............ இந்தக் காலத்துப் பிள்ளைங்க... சன்னாசி, பேய்க்குப் பொறந்தவன் அவனுக்கும் தெரியாது, கிராமத்திலே யாருக்கும் தெரியாது. இப்ப உங்ககிட்ட சொல்கிறேன் பேய்க்குப் பொறந்தவன் சன்னாசி-