பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடு போலீஸ் ஸ்டேஷனுக்கு; அங்கே போய் முடிவு பண்ணிக்கு வோம்’ என்ருன். வீண் வங் என்னத்துக்கு என்று டிசைவரும் பயணியும் சமரசமாய்ப் போஞர்கள். இவன் ரசித்துத் தனது சிரிப்பைக் கலகலவெனப் புராவிட்டான். - - இப்படி எத்தனேயே நிகழ்ச்சிகள் பஸ்ஸில் பிறருக்காகப் பரிந்து இவன் கண்டக்டரோடு எத்தனையோ முறை சண்டைக் குப் போயிருக்கிருன். தெருவில் இரவு வேளைகளில், குடித்து விட்டு வந்து கூச்சலிட்டுக் குழப்பம் செய்து பிறர் தூக்கத்தைக் கெடுப்பவர்களோடு சண்டைவிட்டு அவர்காே அப்புறப்படுத்திய -அல்லது, அமைதி கோப்-டுக் :த்த - முறைகள்தான் எத்தனை அமைதியைக் கெடுத்து அநாகரிகமான முறையில் நடந்துகொள்கிருள்கள் என்று, அக்கம் பக்கத்து வீடுகளில் ஏசிப்பேசிக் சண்டையிடும் புருஷன் பெண்டாட்டி விவகாரங் களில் கூட இவன் தலையிட்டிருக்கிருன் , ஏன் இவன் இப்படி எல்லாம் நடந்துகொள்கிருன் என்று: மற்றவர்கள் திகைப்பது போலவே, அவனும் வியப்படைத் திருக்கிருன் ஏன் தான் இந்த ஜனங்கள் இப்படி எல்லாம் நடத்து கொள்கிருர்களோ என்று. "இவர்கள் அறிவு விழிப்பு பெருததுதான் காரணம். மனி தத் தன்மையோடு வாழக் கற்றுக்கொள்ளrததுதான் காரணம். மனிதராக வாழ விரும்பி, முயற்சி செய்யாததுதான் காரணம். ஏன் வாழ்க்கை இப்படி எல்லாம் அமைந்து கிடக்கிறதும்" என்று அவனுள் எண்ணங்கள் அலேமோதும், - "நாடு போற்றும் நல்லதம்பி'களாக வெளிச்சம் போட முயலும் திரைப்பட ஹீரோக்கள் சிலரை இவனும் பின்பற்ற முயல்கிருன் போலும் என்று எவரும் பாஸ்கரன்ே ஐயுற முடி யாது. அவனது சுபாவங்களை அறிந்தவர்கள், அவனுள் குறு குறுக்கும் தர்ம நியாயத்தின் சீற்றமே இத்தகைய் செயல் களாக மலர்கின்றன என்பதை எளிதில் உணர்ந்துகொன் அார்கள். அவனது பேச்சுக்களில் ஒரு ஆவேசம் இருந்தது. அவன் உணர்ச்சிகளில், தனி வேகம் தெரிந்தது. அவ்ன் செயல்களில் ஒரு நியாய உண்மை வெளிப்பட்டது. அனைத்தினும் மேலாக, அவன் முகத்தில் ஒரு கவர்ச்சியும், கண்களில் தனி அறிவொளி யும் சுடரிட்டன. இவை எல்லாம், அவன் எதிர்நின்ற அந்த நேரத்துக்கேனும், மற்றவர்களை அவன்பால் வசீகரித்தன. அவனை வியக்கவும் பாராட்டவும் வகைசெய்தன. அவனே தன் இயல்பின்படி செயல்புரிந்தான். தனது மனசின் குரல்தான் தர்மத்தின், நியாயத்தின், சத்தியத்தின் குரல் என்ற நம்பிக்கையும் அவனுள் ஒலித்துக்கொண்டிருந்தது. i3