பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பம் பெரியஇடத்தில் குடியிருப்பதும், இரண்டே நபர்களைக் கொண்ட பெரிய பதவிக்காரர் குடும்பம் சிறிய இடத்தில் வசிப்பதும் அங்கே நடைமுறையில் உள்ளது. இங்கேர்? ஒரே அறையில், அஞ்சாறு பேர் உள்ள குடும்பம் முடங்கிக் கிடப்ப தும், பணம்-சொத்து-பதவி-பெரிய இடம் என்று ஏதேதோ தகுதிகள் பேசி இரண்டு மூன்று பேர் பலப்பல் அன்றiள் கொண்ட பெரிய கட்டிடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப் பதும் சகஜமாக இருக்கிறது. இதெல்லாம். மாறவேண்டும்." இந்த எண்ணத்தை அவன் பின்னர் தன் நண்பர்கள் அனிேவரிடமும் சொல்லிவந்தான். - - பாஸ்கரனும் வசந்தாவும் குடியிருந்த வீடு இரண்டுபேருக் குப் போதுமானதுதான். ஐம்பது ரூபாய் வாடகை ஒட்டுக் குடித்தனத் தொல்லைகள் எதுவும் இல்லாது தனித்திருந்த சிறு. வீடு, பல வீடுகளைக் கொண்ட் காம்பவுண்டில் அதுவும் ஒன்ருக இருந்தது. பாஸ்கரனுக்கு வருமானம் அதிகமாக ஆக, ஆந்த வீடு அவனுக்கும் அவன் மனைவிக்கும் போதுமான இடமாகத் தோன்றவில்லை. தனித்தனி அறைகளும் மாடியும் இருந்தால் தன்ருக இருக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. இடம் இன்னும் நிறைய இருந்தால், கிடைத்துள்ள பரிசுப் பொருள்களை எடுப்பாக வைக்கலாம்; அழகு அழகான படங்கள் வாங்கி மாட்டலாம்; அருமையான சுவர்க்கடியாரம் மையமான இடத்தில் அணி செய்யவேண்டும்! ரேடியோ வாங்கி வைக்க னும்; இரும்புக் கட்டில், வீலிங் ஃபேன், தனியாக டேபிள் ஃபேன் ஒன்று-இவை எல்லாம் ஆடம்பரப் பொருள்கள் அல்ல; அவசியத் தேவ்ைதான் என்று இரண்டுபேரும் தீர்மானித் தார்கள். - தீர்மானத்தை விரைவிலேயே செயலாக்கவும் செய்தார்கள் நூற்றைப்பது ரூபாய் வாடகையில் வசதியான சிறு வீடு ஒன்று "பங்கள்ா மாதிரியானது-அவர்களுக்குக் கிடைத்தது. பாஸ்கரனுக்கும் வசந்தாவுக்கும். சந்தோஷமாவது சந்தோ ஷம் பொங்கிப் பொங்கி வழிந்தது. அது. 11 f . - இந்த நாட்டில் ஒருவன் வெற்றிகரமாக முன்னேற வேண்டும் என்ருல், அவன் தேர்ந்தெடுத்து உழைக்கிற துறை 35