பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரிகிற எந்தத் தொழிலும் கெளரவமானதுதான். உழைக் காமலே இருந்து தின்ன ஆசைப்படுவதுதான் பெரும் குற்றம். நீங்கள் வீண் பெருமையும் போலிக்கெளரவமும் பாராட்டாமல் நாணயமான தொழில் ஏதாவது செய்திருந்தால் சிறுகடை ஏதேனும் நடத்தியிருந்தால் - நம்ம நிலைமை இப்போ இவ் வளவுக்கு வந்திராது . பெரிய தகப்பன்சாமி ஆயிட்டியோ நீ? நீ எல்லாம் எங்கேலே உருப்படப் போறே என்று காறித் துப்புவதோடு, அவன் எக்கேடும் கெடட்டும் என்று விட்டுவிட்டார் பிள்ளை. செல்லையா தன் போக்கில் உழைக்கலாஞன். பெரிய வீட்டுப் பையன் என்று பெருண்ம பேசிக்கிட்டிருந்தால் பட்டினி திடக்க ஆேண்டியதுதான். ஒவ்வொருவனும் ஏதாவது தொழில் செய்து பிழைக்கவேண்டிய காலம் இது என்று அவனைப் பற்றி விசாரிப்பவர்களிடம் அவன் சொல்வது வழக்கம். அவன் ஒட்டல் தொழிலாளியாகவே இருந்துவிடவில்லை. ஒட்டலுக்கு வருகிறவர்களிடம் நன்கு பழகி, பேச்சுக் கொடுத்து, யார் யாரையோ தயவு பிடித்து, ஒரு மோட்டார் தொழிற்சாலை வில் வேலை தேடிக்கொண்டான். இதற்குத் தினசரி சிவிபுரத்தி லிருந்து வந்துபோக வசதி இருந்ததனல், அவன் வீட்டிோடு தங்க முடிந்தது. அவனது வருமானம் குடும்பத்துக்கு நன்கு உதவி:யது. - - என்ருலும், வாழ்வின் தேவைகளும், விலைாைசி உயர்வு களும் அக்குடும்பத்தின் கஷ்டங்களையும் வறுமையையும் வளர்த்தே வந்தன. பாக்கியம் பிள்ளை தனக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு என உணர்ந்ததாகவே தெரியவில்லை, தமது தேவைகள் நிறைவுற வேண்டும் என்று மட்டும் உரிமை யோடு எதிர்பார்த்தார். இன்றும் காப்பி இல்லை; இனி என்றும் காப்பி கிடைக் காது போலிருக்கு ' என்ற் எண்ணம் அவரை ஆத்திரம் கொள்ள வைத்தது. ஆற்றுக் குளியலும் அப்பன் முருகன் தரிசனமும் அவர் உன்னத்தின் எரிச்சலேத் தணிய வைத்துவிடவில்லை. ஒரே புகைச்சல், மனைவி மீதும், மக்கள் மேலும் சீறி விழுந்துகொண் டிருந்தார். மாலையில் மகன் வீடு திரும்பியதும் அவனேக் க்டித்துக் குதற வேண்டும் என்று உறுமிக் கொதித் இருந்தது அவர் உள்ளம், செல்லேயா அவரது ஆங்காசத்தைக் கிளறிவிடக்கூடிய வேறு சில யோசனைகளோடு சந்திக்க முன்வருவான் என்று அவர் எண்ணியிருக்கவே இல்லை. ஆளுன் அப்படித்தான் நடந்தது. - 4. క్షీ $ $