பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருந்தார்கள். ஒருவர் இரண்டாயிரம் அர்ச்சனை சொன்ஞல், அதே சமயம் கூடவே பத்துப்பேர் கோரஸ் ஒலிப்பார்கள். ஆகவே, இருபதாயிரம் தடவை அர்ச்சிக்கப்பட்டதாகக் கணக் கிடுவார்கள். அத்துடன் முதலில் ஒப்புவிப்பவனின் இரண்டா வீரத்தையும் கூட்டிக் கொள்ளவேண்டும். சில நிர்ட்களில் அதிகப்படியான நபர்கள் அர்ச்சனே கோஷத்தில் கலந்து கொண்டார்கள். எல்லாம் கணக்கு வைத்து ஒழுங்காகக் கூட்டப்பட்டு வந்தது. தினந்தோறும் காலை 6 முதல் 12 வரையிலும், மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 12 அல்லது 1 மணி மட்டிலும், இயந்திர ரீதியாக இந்த அர்ச்சனை கோஷிக்கப்பட்டது. அது ஒலி பெருக்கிமூலம் சிவபுரம் நெடுகிலும் ஒலிக்கும்படி வசதி செய்யப்பட்டிருந்தது. - தினசரி அம்பிகைக்கு அலங்காரம் தடயுடலாக இருந்தது. முக ஒப்பனையும் நகைபுஷ்ப அலங்காரமும், நாஞ்க்கு ஒரு நிறத்தில் அருமையான் பட்டும் கட்டி, பூக்களால் நன்கு சோடிக்கப்பட்ட சூழ்நிலையில், குளுகுளு விளக்கொளியில் அவன் புதுப் பெண் போல் காட்சி அளித்து நின்ருள். ஏகப்பட்ட செலவுதான். சிவபுரம் வாசிகளிடமும், அக்கம் பக்கத்து ஊர்களிலும், டவுண் பிரமுகர்களிடமும் கோடி அர்ச் சனைக் குழுவினர் நிதி வசூல் செய்திருந்தார்கள். அர்ச்சனைக்குப் பத்து ருபாய் என்று ரேட் குறிப்பிடப்பட்டிருந்தது. புரோக் கர்கள் மூலம் புண்ணியம் தேடிவிட முடியும் என்ற நம்பிக்கை உடைய பக்தர்கள் பணம்செலுத்தி, அர்ச்சனையில் தங்கள் பெயரும் ஒலிக்கும்படி செய்து தேவியின் திருவருள் பெற்று விட்டதாக அகம் மகிழ்ந்தார்கள். பெரிய வீட்டுக்காசர்கள் சிலர் தன் பெய்ரில், மனேவி மக்கள் பெயரில் எல்லாம் அர்ச்சனே சொல்ல வேண்டும் என்து இருபதும் முப்பதும் ஐம்பதும் கட்டிச் சீட்டுப் பெற்றுக் கொண்டார்கள், - - வறட்டுத் தவளேகளின் ஓயாத கூச்சல் போல் இடையருது ஒலித்துக் கொண்டிருந்த அர்ச்சனை கோஷிப்பில் முறைப்படி அவர்களுக்காகவும் அர்ச்சிக்கப்பட்டது. அன்றுதான் இறுதிதாள், மற்ற நாட்களேவிடச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும்ே அக்கறை, பாலேயாப்பிள்ளை டவுனுக்கு ஆள் அனுப்பி துறு ரூபாய்க்கு புஷ்ப வகைகள் வாங்கிவரச் செய்திருந்தார். இன்னுேரு பிரமுகர் அம்மனுக்கு அழகாகவும் எடுப்பாகவும் இருக்கும் என்று ஆகாய நீல வர்ணத்தில், எழுபத்தைந்து ரூபாய் விலையில் ஒரு பட்டு எடுத்திருந்தார். இப்படி ஒவ்வொருவரும் 63