பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரா * 99

தோற்றதாகப் பேசிக் கொண்டார்கள். அதற்குப் பிறகு அவர்களும் தேவாரம், திருவாசகம் என்று பேசிச் சமயத்துறைக்குப் போய்விட்டார்கள்.

ஆண்டுதோறும் தேர்தல் என்றால் அரசு ஊழியர்கள் 'அகம் மலர முகம் மலர வரவேற்பார்கள். அதுவும் வருவாய்த்துறை ஊழியர் களைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. அவர்கள்தானே தேர்தல் யந்திரத்தை இயக்குபவர்கள் ஒரு தேர்தல் ஒய்ந்துவிட்டால், அது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வரிசையாகப் பதவியிறக்கம் பெற நேரும்; அதற்கு முன் அடுத்த தேர்தல் வத்து விட்டால் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலா மல்லவா?

அண்மையில் காந்திகிராமப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அறம் பஞ்சாயத்துத் தேர்தல்களை தேர்தல் கமிஷனே ஏற்று நடத்தவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

எந்தத் தேர்தல் என்றாலும் உண்மையில் நடத்துவது என்னவோ உள்ளூர் தாசில்தாரோ பீ.டீ.ஓ வோ தான். டில்லியிலிருந்து ஒவ்வோர் ஊருக்கும் தேர்தல் ஆணையாளரா வரப்போகிறார்? வெறும் அறிவிப்பு மட்டும்தானே அவரிடமிருந்து வரும்.

பஞ்சாயத்துத் தேர்தலை நடத்த உத்தரவிடுகிற அதிகாரம் மாநில அரசிடம் இருப்பதால், அது நடத்தவே மாட்டேன் என்கிறதே என்ற ஆதங்கத்தில் தான் டாக்டர் அறம் அப்படிக் கூறினாரோ என்னவோ? மாநில சுயாட்சி கேட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடலாமா? *

பஞ்சாயத்துத் தேர்தல் மட்டுமா, கூட்டுறவுத் தேர்தல் உட்பட எல்லாத் தேர்தல்களையும் நடத்திவிட வேண்டு