பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டனன் காலினுக்கணியை - பிரிவு பற்றிய ஒரு நனவோடைக் கவிதையாகவே வந்திருக்கிறது. தலைப்பு கம்பர் அடியின் கேலியடி (Parody). அதனால் நாயகன் நாயகி பாவமே வந்துவிடுகிறது. மண்டபத்தில் காலணிக் கட்டணம் வசூலித்து வரதட்சணை கொடுத்துத் தளர்ந்துபோயிருக்கும் மணவீட்டிலும் இவர் பார்வை பாதிக்கப்பட்டவர் பக்கமே பதிகிறது. பொது இடத்தில் கேவலம் சின்னஞ்சிறு பொருளைத் திருடக் கூசாத பெரிய மனிதனைக் காட்டித் திருட்டும் கூடத் தரம் தாழ்ந்துபோன இருட்டுச் சமூகத்தையல்லவா சுட்டுகிறார்.

கலைகளுக்கெல்லாம் முதற்பொருளான கவிதை கடைப் பொருளாகியிருப்பதைப் படிக்காசுப் புலவரை வைத்து அளவிட்டிருக்கிறார். சிறுதொழில் யுகத்தில் கவிதை ஒரு பெருந் தொழிலாகிவிட்டிருப்பதைக் கவலை யோடு சிந்திக்கிறார். கவிதைக்கு டியூடோரியல் கல்லூரி திறந்தாலும் வெற்றிகரமாய் ஒடுமாம். வரும் நாளில் ரெடிமேட் கவிதைக் கடைகள், தொழிற்சாலைகள் பெரு இவிடும் என்கிறார். சரிதானே? எட்டுவரி எழுதினால் அதை நான்கு புத்தகமாகப் போட்டுவிடலாம் (அணுகுண்டோ?) என்பதுதான்நம் கவிஞர்களின் இலட்சியமாக இருக்கிறது? டாக்டர் ஜான்சன் சொல்வார் 'தான்படித்த நூல்களைவிட அதிக எண்ணிக்கையில் புத்தகம் எழுதுபவனை எழுத்தாளன் என்றே ஏற்கமாட்டேன்" என்று. மீரா இந்த வகையிலும் தேறிவிடுகிறார். அவர் படிப்பு எக்கச்சக்கம் என்பதற்கு இக்கட்டுரைகளே சான்று. மேலும், பதிப்பகங்கள், அச்சக வசதிகள் அருகிருந்தும் வெளிவந்துள்ள அவரது நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். -

கருப்பொருள் கடைப்பொருளாவது மற்றுமோர் அழகிய, பொறுப்புள்ள கட்டுரை. தாழ்வுக்கு வந்த

9

%