பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 19

மண்டை ஓடு, மை டப்பா, உடுக்கு, கருப்புத்துணி ஆகிய உபகரணங்களுடன் ஒருசின்னப் பையனையும் வைத்துக் கொண்டு தன் தொழில் நுணுக்கத்தைக் காட்டிய அந்தச் செப்பிடு வித்தைக்காரன் இப்போது பூமிக்குக் கீழே கிடக்கிறானோ.... மேலே நடக்கிறானோ....! அவன் எங்கே இருந்தாலும் அவன் தொழில் இந்தத் தேசத்தின் எல்லாத் திசைகளிலும் செழித்து வளர்கிறது. அவன் குரல் எங்கெங்கும் கேட்கிறது... வா, இந்தப் பக்கம்..... வா, இந்தப்பக்கம்.

பல பத்திரிகைகளின் நடுப்பக்கங்களில் நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றனர். அவர்களின் நாயகி நாயக பாவம்' வாசகர்களை 'வா இந்தப் பக்கம்’ என்று சுண்டி இழுக்கின்றன. பாவம் எப்படியோ, பாவம் நம் வாசகர்கள்! சினிமா உலகின் தேவரகசியங்களைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பத்திரிகையைப் புரட்ட வேண்டியதிருக்கிறது. பத்திரிகை படிக்கத் தெரியாதவர்கள் பாக்கியசாலிகள் என்று அவசரப்பட்டுச் சொல்லி விடவேண்டாம்... அவர்களுக் காகத்தானே சுவரெங்கும் புதுப்புது போஸ்டர்கள்....

தேனிக்களைப் போல் இரைச்சலிட்டுக் கொண்டும் நத்தையைப் போல் ஊர்ந்தும் பாம்பைப் போல் வளைந்தும் அரிசிக் கடையை நோக்கி மக்கள் வரிசை சென்றது என்று கே.ஏ. அப்பாஸ் ஒரு கதையில் எழுதினார். w

நம் தமிழ் நாட்டில் அரிசிக்கும் மண்ணெண்ணெய்க்கும் நிற்கும் வரிசையின் நீளத்தை விட ரஜினி கமல் படங்களுக்கு நிற்கும் வரிசையின் நீளம் பெரிது; அவர்கள் கலாரசனையின் ஆழம் இன்னும் பெரிது.