பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 23 ஒரு பக்கம் சினிமா வா இந்தப் பக்கம் என்கிறது. ஒரு பக்கம் சாராயம் வா இந்தப்பக்கம் என்கிறது. ஒரு பக்கம் லாட்டரி வா இந்தப்பக்கம் என்கிறது.

இதற்கிடையில் சிந்தனையை நோக்கி ஒழுக்கத்தை நோக்கி உழைப்பை நோக்கி 'வா இந்தப் பக்கம்' என்று நான் கூப்பிட்டால் 'சாருக்கு எந்தப் பக்கம்' என்று நம் பச்சைத் தமிழர்களிடமிருந்து பதில் வராமல் இருக்காது.

எதற்கு வம்பு? பேசாமல், பெரியவை பற்றிப் பிலாக்கணம் பாடாமல் சிறியவை பற்றிச் சிந்திப்போமாக.