பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் * 26

நேரடி வாசிப்பு அல்லது விவாதம் அல்லது படைப்புப் பட்டறை இவற்றில் ஏதேனும் ஒன்று அங்கே சாதாரணமாம். *. >

ஆவன் அறநிறுவனம் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யும் தேசிய கவிதைப் போட்டியில் பங்கு பெறுவோர் தொகை கூடி வருகிறதாம். நுழைவுக் கட்டணம் கவிதை ஒன்றுக்கு ஒரு பவுன் என்று வைத்தும் ஒருலட்சத்துக்கும் மேல் வசூலாகி விட்டதாம்

பிரிட்டனில் மட்டுமல்ல. இங்கேயும் கூட கவிதை பல்லாயிரம் பேர் பங்கு கொள்ளும் ஒரு பெருந் தொழில் என்று கண்டு கொள்ளப்பட்டு விட்டது. ; "

அரசியல்வாதிகள் இனி அரசியலில் லாபம் இல்லை என்று எண்ணிக் கவிதைப் பக்கம் வரப்போகிறார்கள்.

அண்மையில் அவசர நிலையின் குரல்கள் (Voices of Emergency) என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைத் தொகுப்பு ஒன்று பம்பாயிலிருந்து வெளிவந்துள்ளது.

தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலிருந்து 280 கவிதைகள்-1975-77 அவசரநிலையை எதிர்த்துக்குரல் கொடுத்த கவிதைகள்-இதில் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 300 பக்கங்கள். விலை ரூபாய் 150.

இவ்வளவு விலை மதிப்புள்ள புத்தகம் வெளிவர உதவியிருக்கிறதே அந்த ஒன்றுக்காகவாவது அவசர நிலைக் காலத்தை மன்னிக்கலாம்.

இன்னொரு அதிசயம்.இதில் ஜெயப்பிரகாசர், வாஜ்பாய் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அரசியல்