பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 27

வாதிகளைக் கவிஞர்களாக்க தொகுப்பாசிரியர் ஜான் ஆலிவர் பெர்ரி ஆசைப்பட்டிருக்கிறார். பிரயாசைப் பட்டிருக்கிறார். - ஜெயப்பிரகாசர் போய்விட்டார்... வாஜ்பாய்க்கு வாய்ப்பு இருக்கிறது.

அரசியல் வியாபாரம் மந்தமாவது தெரிந்தால் கைவசம் இன்னொரு தொழில் இருக்கிறது. எந்த வினாடியிலும் கவிதையைக் கவனிக்கலாம்.

பிற்காலத்தில் படிக்காசுப் புலவர் கஞ்சர்களிட மெல்லாம் கையேந்த வேண்டிய காலக் கொடுமையை நினைத்து ஒரு கவிதை பாடியிருக்கிறார். பேசாமல் கழைக் கூத்தாடியாகவோ, செப்பிடு வித்தைக்கார னாகவோ பிறந்திருக்கலாம்... அல்லது விலை மகளாகப் பிறந்திருக் கலாம். அல்லது பெண்களுக்குத் தூது சென்றாவது பிழைத்திருக்கலாம்... இப்படிப் பல தொழிலுமிருக்க என்ன பிழைப்பு என்று இந்தச் 'சனியான தமிழைக் கட்டிக் கொண்டு கவிபாட வந்தேன் என்று நொந்திருக்கிறார்.

புலவர் பெருமான் இப்போது புறப்பட்டு வந்தால் அந்தக் கவலை அவசியமற்றது என்று புரிந்து கொள்வார். 'தமிழை விட்டு வேறு எந்தத் தொழிலையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. தமிழை விற்று படிப் படியாகக் காசை அளந்து குவிக்கப் பலவழிகள் இல்லாமல் இல்லை.

மாதம் நான்கைந்து கவியரங்கங்களுக்குத் தலையை

ஏற்க இசைந்தால் போதும்; இருநூறு முன்னூறு என்று கொடுப்பதற்கு இலக்கிய மன்றங்கள் தயாராக உள்ளன.