பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் & 32

தேவையை ஒட்டி நூற்றுக்கு மேற்பட்ட கவிஞர்கள் பணியாற்றும் கவிதைத் தொழிற்சாலை தொடங்கப் பெறலாம்.

பள்ளி கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் விண்ணப்பங்களில் அப்பாவின் தொழில் என்பதற்கு இதுவரை யாரும் கவிஞர் என்று குறிப்பிடுவதில்லை. எவ்வளவு புகழ் வாய்ந்த கவிஞராக இருந்தாலும் அவர் பார்க்கக்கூடிய ஏதாவது ஒரு வேலைதான் தொழிலாகக் கருதப்படும்.

பாவேந்தர் பாரதிதாசனின் வாரிசுகள் கூட விண்ணப்பங்களில் அப்பாவின் தொழில் என்பதற்கு "வாத்தியார் என்று தான் எழுதியிருப்பார்கள்.

வாத்தியார் கனகசுப்புரத்தினம் என்றால்தானே புதுச்சேரிக் காரர்களுக்கே விளங்கும்.

இனி ஆசிரியர், தச்சர், கொல்லர், மருத்துவர் போன்ற தொழிற் பெயராகவே கவிஞர் என்ற பெயரும் ஏற்றுக் கொள்ளப்படும்.

கவிதையில் தனக்குள்ள நேயத்தையும் நெருக்கத்தையும் வைத்து மகாகவிபாரதி நமக்குத் தொழில் கவிதை என்று பாடினார். செய்யும் தொழிலே தெய்வம்' என்னும் கருத்தின் அடிப்படையில் கவிதையை வணக்கத்துக்குரிய ஒன்றாகக் கருதினார். வருவாய்க் குரிய ஒன்றாகக் கருதவில்லை.

காலம் மாறிக் கொண்டிருக்கிறது.

கி.பி. இரண்டாயிரத்தில் பாரதி வந்தால் அவரை வரவேற்கத் திரண்டிருக்கும் கூட்டத்தில் நூற்றுக்குப்