பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டனன் காலினுக்கு அணியை....!

வைகை எக்ஸ்பிரஸ் திருச்சியைத் தாண்டிய பிறகுதான் கவனித்தேன்.

அதே தோல் அதே நிறம் அதே மாதிரி நகம் மட்டும் வெளியில் தெரியும்படி கட்டை விரலுக்குக் கவசம்!

எள்ளளவும் சந்தேகமில்லை, என்னுடையதுதான்.....

வண்டி வேகமாகப் போகிறது. ஆனந்தம் - ஆத்திரம் இரண்டுக்கு மிடையில் என் மனம் அலைபாய்கிறது. 'கண்டனன்காலினுக்கு அணியை.....!" என்று பூரீராம பக்த அனுமார் என்னுள்ளிருந்து கத்துகிறார் ...

என்னைப் பிரிவுத்துயருக்கு ஆளாக்கிவிட்டு அந்த ஜோடிப் புறாக்களைக் கடத்திக் கொண்டு வந்த ஆள் என்