பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கேட்டால் சொல்வேன்

சொற்களால் என்னென்ன சாதிக்க முடியும்?

“வார்த்தை ஜாடிகளில் இணக்கமென்னும் வன தேவதையைச் சிறைப்பிடித்து அடைத்தோம்;

சொற்கிண்ணங்களில் உவகையென்னும் பழரசத்தைப் பரிமாறினோம்; வார்த்தை மெழுகுத்திரிகள் கொண்டு நம் இதயத்தின் அந்தரங்கங்களை ஒளிசெய்தோம்;

வார்த்தை விரல்களால் வியப்புக்களின் முடிச்சுகளை மெல்ல அவிழ்த்தோம்; சொல் உளிகளால் அர்த்தச் சிற்பங்களை வடித்தோம்;

வார்த்தைகளால் மிருதுவாய்த் தொட்டு அழகுகளைத் துயிலெழுப்பினோம்” - ஜாஹிதா ஜெய்தியின் (Zehida Zaidi) பட்டுப்போன்ற மென்குரல் வார்த்தைகளின் வலிமையை இப்படியெல்லாம் பேசுகிறது.

உண்மைதான்!

எப்பேர்ப்பட்டவை இந்தச் சொற்கள்!

இருபனிக்கட்டிகளை உரசி நெருப்புத் தயாரிக்கும் ஒரு சொல்;

தீச் சுவாலைகளால் விசிறி செய்து கோடைக்குக் குளிர் வீசும் வேறொரு சொல்!

3